Rock Fort Times
Online News

மயிலாடுதுறை மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை-தனியார் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை…!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காட்டுத்தீ போல் இந்த செய்தி பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது சிறுத்தையின் கால் தடம் உள்ளதை பொதுமக்கள் காண்பித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு போலீஸார் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் கால் தடத்தை ஆராய்ந்து அது சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இது ஒருபுறம் இருக்க இன்று( ஏப்ரல் 3) அதிகாலை வாய்க்காலில் படுத்திருந்த பன்றியை சிறுத்தை கடித்துள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையை துவங்கி உள்ளனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் சார்பில் ஒவ்வொரு வீதியிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை அருகில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்