Rock Fort Times
Online News

தமிழகத்தில் வருமானவரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.4 கோடி பறிமுதல்…!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக வருமானவரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னையில் கொண்டித்தோப்பு, ஓட்டேரி உட்பட 5 இடங்களில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 2.60 கோடி ரூபாயும், சேலத்தில் 70 லட்சமும், திருச்சியில் 55 லட்சமும், வாகனச்சோதனையில் 40 லட்சம் என நான்கு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்ட பணமா?, இதில் வேட்பாளர்களுக்கு சம்பந்தம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்