திருச்சிக்கு நாளை வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…!
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அளிக்கப்படுகிறது
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞர்அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, துறையூர் பகுதிகளில் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (30-07-2024) மதியம் சுமார் 1 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகின்றார். அப்போது விமான நிலையத்தில் கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது விமான நிலையத்திற்கு வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments are closed.