திருச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்களிடம் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த தேவி என்கிற உமாதேவி (வயது 43), மைக்கேல்சாமி (19), திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
Comments are closed.