சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்துவந்து செல்கின்றனர். பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த மாத பௌணர்மி இன்று 23 ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.55 மணிக்கு தொடங்கி, நாளை 24 ந்தேதி சனிக்கிழமை மாலை 6.51 மணிக்கு முடிகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் பௌணர்மி தரிசனம் செய்யலாம் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.