திருச்சி, திருவானைக்காவலில் கூட்டுறவு இணைப்பதிவாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு..!
திருச்சி, திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத். இவர், சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு துறை இணை பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர் மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.