மணப்பாறை அருகே அசந்த நேரத்தில் பைக்கை ஆட்டையைப்போட முயன்ற திருடர்கள்!
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள, பெரியமணப்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் அதே கிராமத்தில் வசிக்கும் கதிர்வேலின் மனைவி கனகவள்ளி என்பவரது மொபட்டை திருட திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அதிகாலை நேரத்தில் கனகவள்ளியின் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த மொபைட்டை நைசாக நகர்த்தி சென்றுள்ளனர்.இதை கவனித்த கனகவள்ளி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்,திருட்டில் ஈடுபட்டவர்கள் திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு சுரேஷ் மகன் சந்தோஷ் என்ற விக்கி மற்றும் பிராட்டியூர் ரபீக் மகன் சேக் அப்துல்லா என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments are closed.