காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமூக தீர்வு ஏற்படும்: திருச்சியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி…!
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் இந்திய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீடு, அரசியல் தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.
காவிரி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் உள்ள முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களுக்கு முழுமையான விவரங்கள் தெரியும்.


பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சரியான குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழ்நாட்டில் ஆளும் கட்சிகளுக்கும் இது தெரியும். இதுகுறித்து இதற்கு மேல் நான் கருத்து கூற விரும்பவில்லை. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றன. காவிரி பிரச்சனை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும். அந்த நாள் விரைவில் வரும். அன்று அந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என தெரிவித்தார்.

Comments are closed.