திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்வது, கஞ்சா, புகையிலை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுவது, பணியை முறையாக செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தீவிரம் காட்டி வருகிறார்
இந்த நிலையில் திருச்சி மாநகரம் கேகே நகர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் அம்சவேணியை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோர்ட்டுக்கு சென்ற ஒரு விவகாரம் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது காவல் ஆய்வாளர் அம்சவேணி விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகரில் பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.