Rock Fort Times
Online News

தமிழக அரசின் பொங்கல் பைகள் தனியார் விற்பனை நிறுவனத்திற்கு கிடைத்தது எப்படி? (வீடியோ இணைப்பு)

ஆடி மாதம் என்றாலே நகைகளுக்கு தள்ளுபடி, ஜவுளி ரகங்களுக்கு தள்ளுபடி என விற்பனை களை கட்டும். அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில், ஆடைகள் கண்காட்சி மற்றும் தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் பலரும் வருகை தந்து தங்களுக்கு பிடித்த ஆடை ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி செல்கிறார்கள். பொதுவாக ஆடை ரகங்களை வாங்குபவர்களுக்கு அந்த கம்பெனி பெயர் போட்ட பைகள் வழங்கப்படுவது தான் வழக்கம். ஆனால், இங்கு ஆடை ரகங்களை வாங்கியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பை வித்தியாசமாக இருந்தது. என்னவென்று கூர்ந்து கவனித்தால் அந்தப் பைகள் அனைத்தும் பொங்கல் தொகுப்புக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பைகளாக இருந்தன. அந்தப் பைகளில் தமிழக முதல்வரின் பொங்கல் வாழ்த்து வரிகள் இடம் பெற்றிருந்தன. அதனை ஆச்சரியத்தோடு பார்த்த பலர் இந்த பைகள் இவர்களது கைகளுக்கு எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மலுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அரசுத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் பைகள் எப்படி தனியார் நிறுவனத்தின் கைகளுக்கு வந்தது? இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

*

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்