தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பாளையம் பகுதி வழியாக கல்லணை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இன்று ( 01.12.2023 ) காலை மனித எலும்புக்கூடு ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த எலும்புக்கூடை மீட்டனர். அந்த எலும்பு கூடில் கழுத்து மற்றும் தலைப்பகுதி, தாடை, கை மூட்டு பகுதிகள் இரும்பாலான ஸ்பிரிங் கம்பியால் இணைக்கப்பட்டு இருந்தது. அது அறிவியல் கூடங்களில் பயன்படுத்தப்படும் செயற்கையான எலும்புக்கூடு என்பது தெரிய வந்தது. இதன்மூலம், ஆற்றில் மிதந்து வந்தது மனித எலும்புக்கூடு அல்ல செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புக்கூடு என்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. இருந்தாலும் அதனை கால்வாயில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.