திருச்சி உறையூர் சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வடிவேல். இவர் கடந்த 19-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையிலிருந்த வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.