Rock Fort Times
Online News

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் திருச்சி தொழிலதிபரை கொன்றோம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்..!

திருச்சி, அரியமங்கலம் பெரியார் தெரு அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (64). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டூர் கைலாஷ்நகர் பகுதியில் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தார். அவர் சாலை விபத்தில் காயமடைந்திருக்கலாம் என நினைத்து அக்கம் பக்கத்தினர் அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பொன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. பொன்ராஜ் உடலில் இருந்த காயங்களை வைத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் பொன்ராஜை சிலர் தாக்குவது பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அரியமங்கலம் முத்துநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் ( 27 ) என்பவர் தனது நண்பர்களான திருநெடுங்களம் வடக்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் பாரதிராஜா (24), அரியமங்கலம் அம்மா குளத்தைச் சேர்ந்த நல்ல முத்து மகன் சந்தோஷ்குமார் (18 ) உள்ளிட்டோருடன் சேர்ந்து பொன்ராஜை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பொன்ராஜின் உறவுப்பெண் ஒருவருக் கும், நிஷாந்துக்கும் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் பொன்ராஜா கொலை செய்ததாகவும் நிஷாந்த் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக விசாரிக்க தொடங்கியதும், ஸ்ரீரங்கம் அடைய வளைஞ்சான் வீதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரசன்னா (20), ஸ்ரீரங்கம் வடக்கு வாசலை சேர்ந்த ரங்கராஜ் மகன் குணசேகர் (21) ஆகிய இருவரும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்