கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லி மலை, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது.
நெல்லிமலை பகுதியில் இருந்து கல்லார் பகுதிக்கு தினமும் வந்து செல்லக்கூடிய இந்த காட்டு யானை தடம் மாறி ராம கவுண்டன்புதூர், தாசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அவ்வாறு வரக்கூடிய காட்டு யானை கிராமங்களுக்கு நடுவே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். ஆகவே பொதுமக்களை அச்சுறுத்தியும், விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.