சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (11.7.2026) தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் க.வி.விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் (பொறுப்பு) வ.தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.