Rock Fort Times
Online News

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, தமிழக முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்… * கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்!

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தவெக அரசின் முதல்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று(18-06-2026) தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்
தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து. மற்றும் தேசிய கீதத்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் அர்லேகர் முதல் உரையை வாசித்தார். புதிய அரசின் திட்டங்கள். நோக்கங்கள் அந்த உரையில் இடம் இடம்பெற்று இருந்தன. எதிர்க்கட்சியான திமுகவினர் தவெக அரசுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

அவர்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பு பல்வேறு பதாகைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்