Rock Fort Times
Online News

ஆபாச படங்களை வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் காதலன் !

திருச்சி பொன்மலை கணேசபுரம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் பிருந்தா வயது 22 இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தியாகராஜன் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவருடன் பேசுவதை பழகுவதை நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் பிருந்தாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அந்த நபர் நீ இப்போது வரவில்லை என்றால் உன்னுடைய ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். ரூ. 5 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிருந்தா பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை தேடி வருகிறார்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்