Rock Fort Times
Online News

டெல்லி முதல்வரின் தனிச்செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை ‘ரெய்டு’…

டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று(06-02-2024) முதல்வரின் தனிச்செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபான கொள்கை நிறைவேற்றியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் இன்று அமலாக்கத்துறையினர் டில்லியில் ரெய்டு நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பைபவ்குமார், ஆம்ஆத்மியின் பொருளாளரும், எம்பியுமான குப்தா வீடு , அலுவலகங்கள், உள்பட 12 இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. நீர்வளத்திட்டத்தில் காண்ட்ராக்ட் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாவும், இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆம்ஆத்மியை மிரட்டவே இந்த ரெய்டு நடப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்