பிரதமர் நரேந்திர மோடி நாளை(20-01-2024) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிரதமரின் வருகையையொட்டி திருச்சியில் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 முதல் பகல் 2 மணி வரை வாகனப் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். சென்னை, பெரம்பலூர் மார்க்கத்திலிருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டும். சேலம், நாமக்கல் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும். கோவை, கரூர் மார்க்கத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலையிலிருந்து மணப்பாறை, விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் சோதனை சாவடி (எண்: 2) திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை வழியாக சென்று வர வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர். சிலை, சாஸ்திரி சாலை, கரூர் புறவழிச்சாலை, அண்ணாசிலை, ஓயாமரி சாலை வழியாக சென்னை புறவழிச்சாலையை அடைந்து செல்ல வேண்டும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர், அரியலூர், பெரம்பலூர், சமயபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூர், குணசீலம் செல்லும் பேருந்துகள் அண்ணாசிலை, ஓயாமரி சாலை சென்னை புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். நெம்பர் 1 டோல்கேட்டிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் திருவானைக்காவல் டிரங்க் ரோட்டை தவிர்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாம்பழச்சாலை, திருவானைக்காவல் வழியாக அழகிரிபுரம் வரை சென்று மீண்டும் அதே வழியில் வர வேண்டும். மேலும், பிரதமரை வரவேற்கும் விதமாக திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலைக்கு வரும் அரசியல் கட்சியினர் வாகனங்கள் திருவானைக்காவல் டிரங்ரோடு, சோதனைச்சாவடி (எண் 6) அருகில் கட்சியினரை இறக்கிவிட்டு நெல்சன் சாலை, ஆண்டவன் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பஞ்சக்கரை சாலை ( ஹோட்டல் ஸ்ரீ) சந்திப்பு முதல் முருகன் கோவில், வடக்கு வாசல், அனைத்து உத்திர மற்றும் சித்திர வீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் எந்த வாகனங்களும் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி இல்லை.
இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
1
of 872
Comments are closed, but trackbacks and pingbacks are open.