திருச்சி உறையூர் நவாப்தோட்டம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 77). இவர், பெரிய கடை வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று குளித்தலைக்கு சென்றிருந்தார்.

பின்னர், வீட்டிற்கு வந்தததும் குளியல் அறைக்கு சென்ற அவர் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குளியலறையில் அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.