தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே நெய்வேலி தென்பாதி பகுதியில் வெடி குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நாட்டு வெடி குடோனில் பலர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று(18-05-2025) இந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ரியாஸ் (வயது 18) உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடி குடோன் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.