பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கருப்பசாமி( வயது 24). இவர் சொந்தமாக இரண்டு லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில், லாரியில் டீசல் இல்லாததால் பாடா லூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். பி.கே அகரம் பிரிவு சாலை பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.