தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன். இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையிலுள்ள 22 வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அதே சிறை வளாகத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சில கைதிகளும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்ள முகமது உசேன் அழைத்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சக கைதிகள் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறைத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து, 22 வது பிளாக் இருந்து 10வது பிளாக்கிற்கு முகமது உசேனை மாற்றியுள்ளனர். இந்நிலையில் தனிமையில் இருந்த முகமது உசேன் நேற்று திடீரென்று கண்ணாடி துண்டை வாயில் போட்டுக் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கண்டு சக கைதிகள் சத்தமிட்டு அலறினர். இதையடுத்து உடனடியாக சிறை அலுவலர்கள் அவரை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி சாமிநாதன் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.