திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தகவல் தொழில்றுட்பத் துறை சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா கல்லூரியில் உள்ள ஹுசைனுதீன் அரங்கில் 08-09-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஆர்.ஜாகிர் ஹுசைன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப துறையின் உதவிப் பேராசிரியர் முகமது சமாம் நாசர் வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக, “இன்றைய டிஜிட்டல் தலைமுறை அறிவில் முன்னேறியுள்ளதா? அல்லது உறவுகளில் பின்ன டைந்துள்ளதா? என்ற சிந்தனைக்குரிய தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எஸ். விஜயலட்சுமி கலந்துகொண்டு, பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பேற்று விழாவைச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, உதவிச் செயலர் அப்துல் சமத், நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குனர் அப்துல் காதர் நிகால், துணை முதல்வர் காஜா மொய்தீன், கூடுதல் துணை முதல்வர்கள் நாகூர்கனி மற்றும் ஜாபர் அகமது,
விடுதி நிர்வாக இயக்குனர் முகமது பாசில், துறைத்தலைவர் முகமது ஷாநவாஸ், கணினி பயன்பாட்டியல் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜி. ரவி, தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைப்பாளர் முகமது சர்புதீன் மற்றும் தொழில்றுட்பத் துறையின் பொறுப்பாளர் அப்துல் சலீம் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். இவ்விழாவில் கணினி அறிவியல் மற்றும் சைபர் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தகவல் தொழில்றுட்பத் துறை சங்க நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். நிறைவாக, தொழில்றுட்பத் துறையின் உதவிப் பேராசிரியரும், துறைச் சங்கத்தின் துணைத் தலைவருமான உசைப் அகமது அனைவருக்கும் நன்றி கூறினார். துணை முதல்வர் காஜா மொய்தீன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எஸ். விஜயலட்சுமிக்கு சால்வை அணிவித்து கௌரவப் படுத்தினார்.

Comments are closed.