அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சொந்த ஊராக கொண்ட இளங்கோவன் திருச்சியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன். வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வரும் இளங்கோவன் டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என எண்ணி 20 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில், அவரது மகள் மதுபாலாவும் டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு எழுதி வருகிறார். வழக்கம்போல இந்த முறையும் குரூப்- 2 தேர்வுக்கு இருவரும் விண்ணப்பித்திருந்தனர். வழக்கமாக வெவ்வேறு தேர்வு மையங்களில் அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்கும். ஆனால், இந்த முறை திருச்சி பொன்மலைபட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத இருவருக்கும் அனுமதி கிடைத்தது. அதன்படி, வெவ்வேறு அறைகளில் தந்தையும், மகளும் இன்று (14-09-2024) டிஎன்பிசி குரூப்-2 தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து வெளியே வந்த அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த முறை இருவரும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என தெரிவித்தனர்.
Comments are closed.