திருச்சி உலகநாதபுரம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 32). இவர் தென்னூர் சிவப்பிரகாசம் சாலை ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பாருக்கு வந்த 3 வாலிபர்கள் அண்ணாதுரையிடம் பணம் கொடுக்காமல் மது வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அண்ணாதுரை மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த 3 வாலிபர்களும் சேர்ந்து அண்ணா துரையை தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில், காயமடைந்த அண்ணாதுரையை சக தொழிலாளர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தில்லைநகர் போலீசில் அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ஜனார்த்தன் ( 24) என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷகில், செந்தில் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.