தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று மாலை வரை எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று(14-03-2024) காலை 6.50 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். வருகிற 16ம் தேதி சென்னை திரும்புகிறார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியுள்ளதால்
இதுதொடர்பாக விவாதிக்க டெல்லி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 939
Comments are closed, but trackbacks and pingbacks are open.