தமிழக முதல்வர் உத்தரவின்படி, திருச்சி லால்குடி மற்றும் ஆலங்குடி மகாஜனம் பகுதிகளுக்கிடையே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சா் மு. க. ஸ்டாலின், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆங்காங்கே பொதுமக்களை சந்தித்தும் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் வகையில் அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்தார். திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, லால்குடி வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி மகாஜனம் கிராம பொது மக்கள், தங்களது பகுதிக்கு பேருந்து வசதி வேண்டும் என, முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று ( 10.06.2023 ) முதல் லால்குடி மற்றும் ஆலங்குடி மகாஜனம் பகுதிகளுக்கிடையே புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் அறிவித்துள்ளார். இந்த புதிய பேருந்து சேவை தினசரி காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும், காலை 8.35 மணி மற்றும் மாலை 6.05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திலிருந்து லால்குடிக்கும் இயக்கப்படவுள்ளது. இவ்வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொது மக்கள், பள்ளி மாணாக்கர் மற்றும் கட்டணமில்லாமல் மகளிர் பயணம் செய்யும் வகையில் கூடுதல் பேருந்து வசதியும் இயக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.