காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டால் தமிழ் நடிகர்களும் போராடுவார்கள்- நடிகா் சரத்குமார் பேட்டி
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. காலம் காலமாக இருக்கும் காவிரி பிரச்சனையை மத்திய அரசு தீர்க்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறும் போது, ஒரே நாட்டிற்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் கட்சியின் கூட்டத்திற்கு பிறகு முடிவெடுப்போம். காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டால் தமிழ்நாடு நடிகர்களும் போராடுவார்கள். வரி விதிப்பு விவகாரங்களில் அரசு மக்களின் வேதனைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தலில் தி.மு.க விற்கும், பா.ஜ.க விற்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.