திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாதிரி வைத்து விற்பனை செய்து வருவதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனி படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை நடத்திய போது காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாஃபர் அலி மகன் ஆசிக் ( 24 )இவர் டிப்ளமோ படித்துள்ளார் மற்றும் காட்டூர் போஸ் தெருவை சேர்ந்த முகமது ரபிக் மகன், முகமது ஹர்ஷத் (23) இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி. சோதனையில் இவா்கள் இருவாிடமும் போதை மாத்திரை இருந்தது தொியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பத்து அட்டை போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.