தென்காசி மாவட்டம், சுரண்டை திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைக்குளம் பகுதிக்கு விவசாயப் பணிக்காக விவசாய தொழிலாளர்கள் சிலர் லோடு ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தனர். சுரண்டை–வாடியூர் சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இன்று தென்காசியில் நடந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு, நெல்லை பகுதியில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் 19 பேர் பலியான நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாரி செல்வராஜ் ‘வாழை’ படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prev Post

Comments are closed.