தமிழகத்தில் நடைபெறும் முக்கிய பண்டிகைகள் மற்றும் தேசிய விழாக்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி டாஸ்மாக் பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மதுபானக்கூடங்கள் இயங்க தடை விதிக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது., குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் டாஸ்மாக் பார்களிலும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்களை வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.