திருச்சி துவாக்குடி பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது ஆர்டரின் பேரில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் பெல் நிறுவனத்திற்கு இரும்பு தளவாட பொருட்களை லாரிகள் மூலமாக அனுப்பி வந்தது. இந்த நிலையில் கடந்த 2022 ஜூன் முதல் அக்டோபர் வரையிலான 6 மாதங்களில் 3 கண்டெய்னர்களில் 153.123 மெட்ரிக் டன் இரும்பு பொருட்கள் அனுப்பப்பட்டன. அதில் 64. 259 மெட்ரிக் டன் இரும்பு பொருட்கள் மேற்கண்ட பெல் நிறுவனத்தை சென்றடையவில்லை. மர்ம ஆசாமிகள் அதனை திருடி விட்டனர். திருட்டுப் போன அந்த இரும்பு தளவாடங்களின் மதிப்பு ரூ.69 லட்சம் ஆகும். இதுகுறித்து துவாக்குடி நிறுவனத்தின் மேலாளர் கார்த்திக், துவாக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இரும்பு தளவாடங்களை ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஏற்றிச்சென்ற பார்சல் சர்வீஸ் லாரிகளின் உரிமையாளர்கள் பாலாஜி (வயது 38), சரவணன் (40) மற்றும் சரவணனின் அலுவலக கிளார்க், தினேஷ், (35 ), மேலாளர் தனசேகர், எழுத்தர் ராஜா , டிரைவர்கள் வெங்கடேசன், சுதாகர், இருதயராஜ், உத்திரபதி, ரமேஷ் , கிரேன் உரிமையாளர் ஸ்டாலின் ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.