Rock Fort Times
Online News

த.வெ.க. கொடி நிறத்துக்கு மாறிய அரசு போக்குவரத்து கழக செயலி…!

தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்துத்
துறையை மேம்படுத்தும் நோக்கில் பழைய டெண்டர்களை ரத்து செய்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட டிஎன்எஸ்டிசி செயலியின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த செயலி, தற்போது சிவப்பு, மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு, பயனர்களுக்கு அப்டேட் ஆகியுள்ளது. முகப்பில் இடது புறம் முதல்வர் விஜய்யின் புகைப்படமும், வலதுபுறம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், டிஎன்எஸ்டிசி-யின் வலைதளத்தின் நிறம் இதுவரை மாற்றப்படவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்