Rock Fort Times
Online News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் …!

முந்​தைய திமுக ஆட்​சி​யில் டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்​தன. அதன் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் எஸ்​.​ வி​சாகன் உட்பட 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்​குப் பதிவு செய்​யப்பட்டுள்ளது. இந்த வழக்​கில்
முன்​ஜாமீன் கோரி செந்​தில் பாலாஜி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​னிலை​யில் நேற்று( ஜூலை 30) விசா​ரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜியைப் போலீஸ் காவலில் வைத்து விசா​ரிப்​பது அவசி​யம். எனவே, முன்​ஜாமீன் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது’’ என்று உத்தர​விட்​டார். அதனைத் தொடர்ந்து, உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு உச்சநீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் முன்​னிலை​யில் இன்று (ஜூலை 31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

“டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது. புலன் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தருவதை நாங்கள் உறுதி செய்கிறோம். தேவைப்பட்டால் எங்களை அணுகலாம். செந்தில்பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. வழிகாட்டுதல், அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீனை ரத்து செய்ய நேரிடும். இடைக்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம்” என நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்