காவிரி நீர் பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் சூடுபிடித்துள்ள நிலையில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகம் சென்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் விஜய் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால், முதலமைச்சர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம்” என்று டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் கர்நாடகம் வந்தாலும் கூட, எங்களால் தற்போது தமிழ்நாட்டிற்குத் கூடுதல் தண்ணீர் திறந்துவிட முடியாது” என்றும், இது தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.