Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.77 லட்சம்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். அந்த உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.77 லட்சத்து 38 ஆயிரத்து 183 மற்றும் தங்கம் 216.6 கிராம் , வெள்ளி 1870.900 கிராம் வருவாயாக கிடைத்திருந்தன. மேலும், 261வெளிநாட்டு நோட்டுகளும் கிடைக்கப்பெற்றன. உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர் ஆ.ரவிச்சந்திரன் ,கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், சரண்யா, மீனாட்சி, வெங்கடேசன், துணை மேலாளர் சண்முகவடி , ஆய்வாளர்கள் மங்கையர்கரசி, பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்