திருச்சி- புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை உள்ளது. சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு , முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, நைஜீரியா, பல்கேரியா, இந்தோனேசியா, வங்காள தேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் இலங்கை தமிழரான சுகந்தன்(வயது 35) என்பவர் தன்னை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி 19-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று ( 22.06.2023 ) 4-வது நாளாக அவர், உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.