Rock Fort Times
Online News

திருச்சி, சென்னை, மதுரையிலிருந்து சபாிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு...

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படி, நாளை மறுநாள் ( 16.11.2023 ) முதல் வருகிற ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு ஆண்டுதோறும் செல்வார்கள் என்பதால் இந்த சிறப்பு பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின்  தகவல்களை பெறுவதற்கு 94450 14452, 94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  அறிவித்துள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்