Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் உள்ள 18 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.19 கோடிக்கு விற்க முயற்சி- பாஜக விவசாய அணி நிர்வாகி கைது…!

திருச்சி,  ஸ்ரீரங்கம்  சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் தென்னை நாற்றங்கால் உள்ளது. இந்த  நிலத்தின் உரிமையாளர் ரெங்கசாமி.  இந்த நிலத்தை  ஸ்ரீரங்கத்தில் உள்ள பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு இடத்தின் உரிமையாளர் ரெங்கசாமி கையெழுத்தை கோவிந்தன் போலியாக போட்டு ஆவணங்கள் தயாரித்து தேவராஜன் என்பவருக்கு விற்க 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் செய்ததாகவும், அதற்கு முன்பணமாக 5 கோடி ரூபாய் கோவிந்தன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தின்படி நிலத்தையும் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் கோவிந்தன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் தேவராஜன் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்