Rock Fort Times
Online News

திருச்சி ஓயாமரி சுடுகாடு மூன்று நாட்கள் மூடல்! மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…

திருச்சி ஓயாமரி சுடுகாடு பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று நாட்கள் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட ஓயாமரி சுடுகாட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரப்பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் அங்கு கொண்டு வந்து எரியூட்டப்படும். காவிரி ஆற்றிற்கு எதிரே அமைந்துள்ளதால் இறுதி சடங்கு செய்ய ஏதுவாக இருக்கும் என்கிற காரணத்தால் பெரும்பாலான மக்கள் ஓயாமரி சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி காரியம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில் நவீன எரிவாயு தகன மேடையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக, அவற்றை சரி செய்வதற்காக நாளை ( ஜூன் 3ம் தேதி ) முதல் 5 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஓயாமரி சுடுகாடு மூடப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள எரிவாயு தகனமேடை, கோணக்கரை பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை ஆகியவை தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்