Rock Fort Times
Online News

மகள் முறையுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை – மனைவி கொடுத்த புகாரில் போக்சோவில் கைது!

திருச்சி,காட்டூரை சேர்ந்தவர் அசன் பீவி (36) இவருக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடைத்தொடர்ந்து ராஜா முகமதுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர், தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக வேலை பார்த்துவருகிறார்.  இந்த நிலையில் ராஜ் முஹம்மது அசன்பீவியின் மகளான 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான். இதை தெரிந்த அசன் பீவி, இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.  அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் ராஜா முகமதுவை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்