Rock Fort Times
Online News

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமறைவாக இருந்த பள்ளி வேன் டிரைவர் சிக்கினார்…!

திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி (37) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும்போது 11ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். திருமணமான முகமதுஅலி இதனை மறைத்து அந்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த தகவலறிந்த முகமது அலி தலைமறைவானார். அவரை தேடி வந்த நிலையில் பத்தாளப்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்