Rock Fort Times
Online News

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…!

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 -ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி அவர் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அவரது அனைத்து மனுக்களும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள்  அபை எஸ் ஓஹா,  ஏ ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்கள்.  இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று(26-09-2024) அளிக்கப்பட்டது.  அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்