இ.பி.எஸ்.க்கு எதிராக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மீண்டும் போர்க்கொடி…* நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவிப்பு!
தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை (14-08-2026) அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, தேனி மாவட்டத்திலும், நாமக்கல்லை சேர்ந்த தங்கமணி, சேலம் மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதனுக்கு ராமநாதபுரத்திலும் போராட்டம் நடத்த இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் த.வெ.க.அரசுக்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம்” என எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், சொந்த மாவட்டங்களை விடுத்து, வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்ததை ஏற்க இயலாது. அதேவேளை, அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்போம். ஆனால், போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். இது எங்களை புறக்கணிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. எங்களுக்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்ற உறுதி என்னானது? . இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.