சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் இந்த தொழிற்சாலையில் இன்று(13-08-2026) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தீபாவளிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் டமார்… டமார்…என்ற சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் தொழிலாளர்கள் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.