திருச்சி கே.கே.நகரில் மின் கம்பங்களை அகற்றாமலேயே விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை- வாகன ஓட்டிகள் அவதி…! (வீடியோ இணைப்பு)
திருச்சி எல்ஐசி காலனியில் இருந்து கே.கே.நகர் செல்லும் ராஜாராம் சாலை கடந்த பல மாதங்களாக குண்டும்-குழியுமாக கிடந்தது. சமீபத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், பழைய சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பங்கள் அகற்றப்படாமல் புதிதாக சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ளன.
இந்த மின்கம்பங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடனே இச்சாலையில் பயணித்து வருகின்றனர். ஆகவே, சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.