திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சிறிய நகர்தான் ரெங்கா நகர். அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், சிறு தொழில் முனைவோர்கள் கொண்ட இந்த நகர் தூய்மை நகராகவும் உள்ளது. நகர் மக்களின் குறைகளை, தேவைகளை அரசு துறைகளுக்கு எடுத்து சென்று தீர்வு காண்பதற்கு ஒரு பாலமாக செயல் பட்டு வருகிறது இங்குள்ள ரெங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கம்.
நகர் தூய்மையாகவும் தெருவிளக்குகள் மற்றும் சாலைகள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருவதற்கு காரணம் இந்த நலச்சங்கத்தின் செயல்பாடு தான். மாநகராட்சியுடனும், மின்சார துறையுடனும், மாமன்ற உறுப்பினருடனும் சுமுகமான நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் 75வது குடியரசு தினவிழா நலச்சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நலச்சங்கத்தின் தலைவர் N. அழகன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவின் விருந்தினரும், நலச்சங்கத்தின் செயலாளருமான கா.தமிழரசன் தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரான திருச்சி மாநகராட்சி 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.S. நாகராஜன் 8வது குறுக்குத் தெரு அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை (எங்களது 4 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது) திறந்து வைத்தும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான கோலப் போட்டியிலும், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், நகருக்கு 7வது குறுக்குத்தெருவில் புதியதாக பாலம் கட்டும் பணி 2, 3 நாட்களில் தொடங்கப்படும். சில இடங்களில் தெருவிளக்குகள் இல்லை என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றி தரப்படும். பாதாள சாக்கடை பணி விரைவில் ஆரம்பிக்க முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.
விழாவை முன்னிட்டு 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அதிகமான பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். மேலும், நலச்சங்கத்தின் பொருளாளர் முத்துகிருஷ்ண மூர்த்தி, உதவி பொருளாளர் சீனிவாசன், உப தலைவர் குமாரசாமி, இணைச் செயலாளர் பாலு, செயற்குழு உறுப்பினர்கள் சூரியக்குமார், மனோகரன், செல்லதுரை, ஹேமலாதேவி, கலா, அமுதா, ரேவதி, லதா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினரான சுந்தர் தொகுத்து வழங்கினார். நிறைவாக இணைச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.