Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.

* திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* திருப்பூர் நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.

* மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

* திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக்குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.

* சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.

* மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியமலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.

* சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.

* சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்