தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் பூச்சொரிதல் விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா வருகிற 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து அம்மனின் தேரோட்டம் விமரிசையாக நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்யவும், தேரோட்டத்தில் பங்கு பெறவும் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், மதுரை ஐகோர்ட் உத்தரவின் பேரில், லால்குடி ஆர்டிஓ சிவசுப்ரமணியன், டிஎஸ்பி அஜய்தங்கம், சமயபுரம் இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் , அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் மேற்பார்வையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன .
சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர் . ஆக்கிரமிப்புகளை அகற்றுதற்கு சில கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.